தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் அரசு மகளிர் கல்லூரி உள்ளது. இங்கு சுமார் 4000-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் ஒரு 20 வயது மாணவி படித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் கர்ப்பமாகினார். அந்த மாணவி தான் கர்ப்பமானதை வீட்டிற்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் தெரியாமல் மறைத்த நிலையில் நேற்று முன்தினம் வகுப்பறையில் பாடத்தை கவனித்துக் கொண்டிருந்த அந்த மாணவிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இந்த மாணவி தனக்கு வயிறு வலிப்பதாக கூறி கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு அந்த மாணவிக்கு குழந்தை பிறந்த நிலையில் youtube பார்த்து தொப்புள் கொடியை வெட்டிவிட்டு குழந்தையை குப்பை தொட்டியில் போட்டுள்ளார். அந்த மாணவியின் உடையில் ரத்தக்கரை இருப்பதை சக மாணவிகள் பார்த்தனர்.

அதாவது அந்த மாணவி இரத்த கரையுடன் வகுப்பறையில் அமர்ந்த நிலையில் சக மாணவிகள் தொடர்ந்து அந்த மாணவியிடம் அது பற்றி கேட்க மாதவிடாய் வந்தது என்று கூறியுள்ளனர். ஆனால் ரத்தப்போக்கு அதிகரித்ததால் உடனடியாக பயந்து போன சக மாணவிகள் ஆசிரியர்களிடம் விவரத்தை கேட்க அந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மாணவிக்கு குழந்தை பிறந்தது தெரியவந்ததால் உடனடியாக மாணவர்கள் விசாரித்து குப்பை தொட்டியில் இருந்து குழந்தையை மீட்டனர். அங்கு உடனடியாக பெண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு மருத்துவர்கள் உயிரைக் காத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.