
டெல்லியில் தற்போது அஜய் லம்பா என்ற 48 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஒரு கொடூரமான சீரியல் கில்லர் ஆவார். அதாவது கடந்த 24 வருடங்களுக்கு முன்பாக டெல்லி மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் 4 கொடூர கொலைகள் மற்றும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த கொலைகளை தொடர்ச்சியாக செய்தவர் தான் இந்த அஜய் லம்பா. இவர் தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து முதலில் வாடகைக்கு ஒரு டாக்ஸியை அமர்த்துவார். பின்னர் ஓட்டுனருக்கு போதைப்பொருள் கொடுத்து அவரை கொலை செய்த பின் ஒரு மலை பாங்கான இடத்திலிருந்து உடலை வீசிவிட்டு நேபாள எல்லையில் அந்த டாக்ஸியை விற்பனை செய்வார். கடந்த 2001 ஆம் ஆண்டு இந்த வழியில் பல ஓட்டுனர்களை இவர்கள் கொன்றுள்ளனர்.
இவர் தீரேந்திரா மற்றும் திலிப் நேகி ஆகியவருடன் சேர்ந்து இந்த கொலைகளை செய்த நிலையில் கடந்த காலங்களில் இவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியான அஜித் லம்பா தன் குடும்பத்துடன் நேபாளம் சென்ற நிலையில் 2008 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை அங்கு தலைமறைவாக இருந்தார். இவர் சமீபத்தில் தான் தன் குடும்பத்துடன் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டோராடுனுக்கு வந்த நிலையில் ஒரு கஞ்சா சப்ளை செய்த வழக்கில் போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கவே இந்த உண்மைகள் வெளிவந்தது. மேலும் தற்போதைய இவர் மீது நான்கு கொலை வழக்குகள் மட்டுமே இருந்தாலும் இவர் இன்னும் பலரை கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுவதால் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.