கார் ஓட்டுனர் ஒருவர் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜப்பான் நாட்டில் ஒரு 54 வயது கார் ஓட்டுநர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய டாக்ஸியில் வரும் இளம் பெண்களுக்கு போதைப்பொருட்கள் கொடுத்து அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

கிட்டத்தட்ட 50 பெண்களை இவர் பலாத்காரம் செய்த நிலையில் தற்போது தான் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது கடந்த வருடம் ஒரு 20 வயது இளம்பெண் அவருடைய டாக்ஸியில் பயணம் செய்துள்ளார்.

அப்போது அந்த பெண்ணிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய அந்த கார் ஓட்டுநர் அவருக்கு போதைப்பொருளுடன் தூக்க மருந்து கலந்து கொடுத்து தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் அதனை அவர் தான் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதலே இதேபோன்று பல பெண்களை சீரழித்துள்ளார். அவர் அந்த பெண்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி பின்னர் போதைப் பொருள் கொடுத்து வீட்டிற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

அதோடு காரில் வைத்து பல பெண்களை அவர் சீரழித்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கார் ஓட்டுநரின் லேப்டாப்பை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்ததில் கிட்டத்தட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது.

கடந்த வருடம் ஒரு பெண்ணுக்கு போதைப்பொருள் கொடுத்து 23,000 பணத்தை திருடிய குற்றசாட்டிற்காக அவர் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்ட நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஒரு இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக கைது செய்யப்பட்டார்.

மேலும் அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் தான் தற்போது இந்த உண்மைகள் அனைத்தும் வெளிவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.