
இந்தியாவில் பிரதமர் மோடி அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான மேக் இன் இந்தியா திட்டம் தற்போது ஜோக் இன் இந்தியா ஆக மாறிவிட்டது என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் விமர்சித்துள்ளார். பட்டம் பறக்க விடுவதற்கான மாஞ்சா நூலில் இருந்து தீபாவளி பட்டாசுகள், ஹோலி பண்டிகைக்கான கலர் பொடிகள், விளக்குகள், விநாயகர் சிலைகள் வரை அவ்வளவு ஏன் நமது மூவர்ணக் கொடி என ஒவ்வொரு பொருளும் சீனாவில் இருந்து வருகின்றன. இதற்குப் பெயர்தான் மேக் இன் இந்தியா திட்டமா?. இது மேக் இன் இந்தியா திட்டம் இல்லை ஜோக் இன் இந்தியா திட்டம் தான் என்று அவர் கலாய்த்துள்ளார்.