இந்தியாவில் பிரதான் மந்திரி லகு வியாபாரி மாந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 3000 ரூபாய் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய மோடி அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த திட்டத்தை கொண்டு வந்த நிலையில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம். சாலையோர வியாபாரிகளுக்காகவே இந்த திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. அதன்படி அறுபது வருடங்களுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் 3000 ரூபாய் பென்ஷன் அவர்களுக்கு கிடைக்கும். வயதிற்கு ஏற்ப இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால் நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்றவாறு அந்த தொகையை மத்திய அரசு வழங்குகின்றது. ஒரு நபர் ஒவ்வொரு மாதமும் 100 ரூபாய் இந்தத் திட்டத்தில் செலுத்தினால் மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் அவரின் கணக்கில் நூறு ரூபாய் செலுத்தும். பயனாளி ஒரு வேலை உயிரிழந்து விட்டால் அவரை மனைவிக்கு பென்ஷன் பலன்கள் சென்றடையும். இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க வேண்டும் என்றால் ஆதார் அட்டை, வங்கி பாஸ்புக் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மொபைல் எண் ஆகியவை இருக்க வேண்டும். முதலில் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் சென்று இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.