அரசுப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் நீக்கப்பட்டதாக எழுந்துள்ள விமர்சனங்களுக்குப் பதிலளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், போக்குவரத்துத் துறைக்கு ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்’ என்று கருணாநிதி தான் பெயர் சூட்டினார் என்றும், ஆனால் அந்தப் பெயர் மிக நீளமாக இருப்பதாகக் கருதி ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேயே ‘தமிழ்நாடு’ என்ற சொல் நீக்கப்பட்டு ‘அரசுப் போக்குவரத்துக் கழகம்’ என்று மாற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு முதலே நடைமுறையில் உள்ள இந்த விவகாரத்தில், தற்போது போராட்டத்தில் ஈடுபடும் தலைவர்கள் ஜெயலலிதாவின் முடிவைக் குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல், வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு விமர்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
