டெல்லி-மீரட் விரைவுச் சாலையில் (வெள்ளிக்கிழமை) மாலை 6.18 மணியளவில், பணியில் இருந்த போக்குவரத்து காவலர் விபின் மீது எர்டிகா கார் ஒன்று வேகமாக மோதிய சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன.
அந்தக் காட்சிகளில், தடுப்புச்சுவர் அருகே காவலர் நின்றிருந்தபோது, திடீரென வேகமாக வந்த காரை கவனித்த அவர் தப்பிக்க முயற்சிக்கிறார். ஆனால் துருதிஷ்டவசமாக கார் நேராக மோதியதன் காரணமாக அவர் காற்றில் தூக்கிவீசப்பட்டார். சம்பவத்தை அடுத்து மற்றொரு போலீசார் அவரை நோக்கி ஓடுவதை காண முடிகிறது.
#GhaziabadNews
ड्यूटी दे रहे ट्रैफिक पुलिसकर्मी को अनियंत्रित तेज रफ्तार कार ने टक्कर मार कई फिट हवा मे उड़ा दिया
गंभीर हालत में मनिपाल अस्पताल में भर्ती कराया गया, हालत नाजुक बनी हुई है,
दिल्ली-मेरठ एक्सप्रेस-वे पर विजयनगर थाना क्षेत्र स्थित आईपीएम कॉलेज के पास की घटना, #CCTV pic.twitter.com/GZpPFXUzYd— Sunil Gautam journalist 🇮🇳 (@SunilgautamUP) August 23, 2025
“>
இந்த விபத்தில் படுகாயமடைந்த கான்ஸ்டபிள் விபின், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது மணிப்பால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விபத்துக்குப் பிறகு கார் நிற்காமல் அதே வேகத்தில் தப்பிச் சென்றது. இது கட்டுப்பாட்டை இழந்த விபத்தா அல்லது குற்றநோக்கத்துடன் நடந்ததா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
