ஆக்ரா–ஜாக்னர் சாலையில் கடந்த சனிக்கிழமை, வேகமாக வந்த கார் மோதியதில் சிபில் சர்வீஸ் தேர்விற்காக தயாராகி வந்த மாணவன் ஒருவர் சாலையில் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்ட சம்பவம் சிசிடிவியில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவராகிய மனீஷ், சிபில் சர்வீசுக்கு தயார் செய்ய அந்த பகுதியில் உள்ள ஒரு நூலகத்தில் மதியம் 3 மணியளவில் சென்று படிக்க சென்றார். அதற்காக சாலை கடக்க முயன்றபோது, ஆக்ராவை நோக்கி வேகமாக வந்த கார், அவரை நேரடியாக மோதியது. இந்த வீடியோவில், மனீஷ் சாலை கடக்க வேகமாக ஓடியபோது, எதிர்பாராதவிதமாக கார் நேரில் மோதிய காட்சி நெஞ்சை பதறும் வகையில் பதிவாகியுள்ளது.
आगरा में सड़क पार कर रहे छात्र को कार ने उड़ाया
कार की टक्कर से दूर जाकर गिरा छात्र, CCTV वायरल pic.twitter.com/p71BDhd74d
— Priya singh (@priyarajputlive) August 24, 2025
“>
விபத்துக்குப்பின் அருகிலிருந்தவர்கள் பெரும் பீதி அடைந்தனர். உடனடியாக காரில் வந்த பயணிகள் மனீஷை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
