மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் மாவட்டத்தின் வசாய்-விரார் பகுதிகளில் சாக்கடை மேன்ஹோல் மூடிகளை குறிவைத்து திருடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகளில், இருவரும் முச்சக்கர வண்டியில் வந்து, சாக்கடை மூடியின் மீது தார்பாலின் பேனலை வைத்து மறைத்த பின், அந்த மூடியை எடுத்து வண்டியில் எடுத்து செல்வதைக் காணலாம்.

இது ஒரு திட்டமிட்ட திருட்டுக் குழுவின் செயல் என சந்தேகிக்கப்படுகிறது. அவர்கள் பிளாஸ்டிக் பேனல்களால் மூடிகளை மறைத்து, கனமான இரும்பு மூடிகளை சட்டவிரோதமாக எடுத்துச் செல்கின்றனர். இந்த வகை திருட்டுகள் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் நடப்பது மக்கள் பாதுகாப்புக்கு பெரும் ஆபத்தாக மாறியுள்ளது.

“>

 

இது தொடர்பாக அதிகாரிகள் தெரிவித்ததாவது, இந்த திருட்டுச் சம்பவங்கள்  மீண்டும் தொடங்கியுள்ளதைக் காட்டுகிறது. காலையில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், இரவில் வீடு திரும்பும் பணியாளர்கள் என பலரும் இவ்வாறு திறந்த மேன்ஹோல் துளைகளால் பாதிக்கப்படக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது

இதுபோன்ற மூடிகளை திருடி அவற்றை இரும்பு பொருட்கள் வாங்கும் கடைகளுக்கு விற்று பணம் சம்பாதிப்பது தான் இக் குழுவின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை நகரத்தில் மட்டும் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 220 மேன்ஹோல் மூடி திருட்டுகள் நடந்துள்ளன. அதில் ஜூன் மாதம் மட்டும் 61 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. முக்கியமாக அந்தேரி மேற்கு, கிழக்கு, போரிவலி, மலபார் ஹில் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. தஹிசாரில் நடந்த ஒரு முக்கியக் கைது மூலம், ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவர் ஏழு மூடிகளைத் திருடியிருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து நாக்பூர் மாநகராட்சி ரூ.15 கோடி செலவில் 10,000 பாதுகாப்பான மேன்ஹோல் மூடிகளை அமைப்பதற்கான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இது போன்ற கட்டமைப்புச் தீர்வுகள் மட்டுமே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியும் என்றே பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.