திருச்சி மாவட்டம் திருவேங்கட நகரை சேர்ந்தவர் முத்து குமார். இவர் பெல் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு முத்துக்குமார் தனது நண்பரின் வீட்டிற்கு சென்றார்.

அப்போது நண்பரின் மனைவி தனியாக இருப்பதை அறிந்த முத்துக்குமார் குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து அவர் மயங்கிய பிறகு ஆபாசமாக செல்போனில் வீடியோ எடுத்ததாக தெரிகிறது.  இதனையடுத்து அந்த வீடியோவை வைத்து முத்துக்குமார் நண்பரின் மனைவியை அடிக்கடி மிரட்டினார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முத்துக்குமாரை கைது செய்து விசாரித்த போது முத்துக்குமார் பல பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியது தெரியவந்தது. இதனால் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.