இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இதனால் ஆதார் கார்டில் உள்ள அனைத்து விவரங்களையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும் மோசடிகளில் இருந்து தப்பிக்கவும் ஆதாரை புதுப்பிப்பது அவசியம். தனிநபர்கள் தங்களுடைய ஆதார் தகவல்களை இலவசமாக ஆன்லைன் மூலம் 2024 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி வரை அப்டேட் செய்யலாம் என்று UIDAI தெரிவித்துள்ளது. எனவே ஆதாரை ஆன்லைனில் இலவசமாக எப்படி புதுப்பிப்பது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

முதலில் UIDAI அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் சென்று விருப்பமொழியை தேர்வு செய்ய வேண்டும்.

புதுப்பிப்பு அம்சத்தை அணுகி எனது ஆதார் என்பதை கிளிக் செய்து உங்கள் ஆதாரை புதுப்பிக்கவும் என்பதை தேர்ந்தெடுக்கவும்.

புதுப்பித்தலை தொடரவும். ஒருவர் ஆதார் விவரங்களை புதுப்பிக்கவும் பக்கத்திற்குச் சென்றதும் ஆவண புதுப்பிப்பு என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

உங்கள் UID number மற்றும் கேப்சா சரிபார்ப்பு குறியீட்டை உள்ளிட்டு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் வரும் ஓடிபி உள்ளீடு செய்ய வேண்டும்.

பிறகு நீங்கள் புதுப்பிக்க விரும்பும் மக்கள் தொகை விபரங்களை தேர்ந்தெடுத்து புதிய தகவலை துல்லியமாக நிரப்பும்.

தேவையான மாற்றங்களை செய்த பின்னர் சமர்ப்பி என்பதை கிளிக் செய்ய வேண்டும். உங்கள் புதுப்பிப்பு கோரிக்கையை ஆதரிக்க தேவையான ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

புதுப்பிப்பு கோரிக்கையை சமர்ப்பி என்பதை கிளிக் செய்து சமர்ப்பித்ததும் எஸ்எம்எஸ் மூலமாக புதுப்பிப்பு கோரிக்கை எண் பெறுவீர்கள். அதனை நீங்கள் உங்கள் கோரிக்கையை நிலையை கண்காணிக்க பயன்படுத்தலாம்.

இருந்தாலும் முக புகைப்படங்கள், கருவிழி ஸ்கேன் அல்லது கைரேகை போன்ற பயோமெட்ரிக் அம்சங்களுக்கு சரிபார்ப்பு தேவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆதார் பதிவு மையத்திற்கு நேரில் சென்று பயோமெட்ரிக் தகவல்களை உறுதிப்படுத்தவும்.