இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏடிஎம் டெபிட் கார்டுகளுக்கான வருடாந்திர பராமரிப்பு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கிளாசிக், சில்வர், குளோபல், காண்டாக்ட்லெஸ் டெபிட் கார்டு களுக்கான பராமரிப்பு கட்டணம் 125 ரூபாயிலிருந்து 200 ரூபாய் ஆகவும், எஸ்பிஐ பிளாட்டினம் டெபிட் கார்டுக்கான பராமரிப்பு கட்டணம் 250 ரூபாயிலிருந்து 325 ரூபாயாகவும், பிரைட் பிரீமியம் பிசினஸ் டெபிட் கார்டுக்கான பராமரிப்பு கட்டணம் ரூ.50 இலிருந்து 425 ரூபாயாகவும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

அதனைப் போலவே புதிதாக பெறப்படும் கிளாசிக், சில்வர், குளோபல், கான்டக்ட்லெஸ் டெபிட் கார்டுகளுக்கான கட்டணம் எதுவும் கிடையாது. இருந்தாலும் புதிய கோல்ட் டெபிட் கார்டுக்கு 100 ரூபாயும் பிளாட்டினம் டெபிட் கார்டுக்கு 300 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும். உங்களுடைய டெபிட் கார்டை மாற்ற வேண்டும் என்றால் அதற்கு 300 ரூபாயும், டூப்ளிகேட் பின் நம்பர் மற்றும் பின் மறு உருவாக்கம் செய்வதற்கு 50 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணங்கள் அனைத்துக்கும் ஜிஎஸ்டியும் உடன் சேர்த்து வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.