2023 ஆம் வருட ஜி 20 உச்சி மாநாட்டின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அதன்படி நாட்டின் பல இடங்களில் மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இதனால் ஜி-20 நாடுகளின்  பிரதிநிதிகள் பலர் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  செப்டம்பர் 7 முதல் 10ஆம் தேதி வரை இந்தியாவிற்கு சுற்று பயணம் மேற்கொள்ள  இருக்கிறார். இது குறித்து அமெரிக்க உதவி செயலாளர் டொனால்ட் லு கூறுகையில், “அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  செப்டம்பர் மாதம் இந்திய பயணம் மேற்கொள்ள மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்.

ஜி 20 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பைடன்  அவர்கள் இந்தியாவிற்கு மேற்கொள்ள இருக்கும் முதல் பயணம் இது” எனக் கூறியுள்ளார். கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சென்றிருந்த போதே ஜோ பைடன்  செப்டம்பர் மாதம் டெல்லிக்கு வர இருப்பதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.