இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தன. அதே சமயம் ஜியோ நிறுவனம் புதிய திட்டங்களை அறிமுகம் செய்தும் பழைய திட்டங்களை மாற்றி அமைத்தும் வருகிறது.

அதன்படி ரிலையன்ஸ் ஜியோ ரீசார்ஜ் திட்டங்களின் விலை சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்டது. இந்த நிலையில் ஜியோ 349 ரூபாய் திட்டத்தில் சிறிய மாற்றங்களை செய்துள்ளது. முன்னதாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களாக இருந்த நிலையில் தற்போது 30 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஒரு நாளைக்கு வழங்கும் 1.5 ஜிபி டேட்டாவை 2ஜிபி ஆக அதிகரித்துள்ளது. பயணங்கள் வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் உடன் இந்த திட்டத்தை பயன்படுத்தலாம். முன்னதாக இந்த திட்டத்தின் விலை 299 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.