சென்னை செம்பரம்பாக்கம் பகுதியில் விஜய் தாபா (20) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரியானாவை சேர்ந்தவர். இவர் கடந்த சில மாதங்களாக ஒரு ஹோட்டலில் தங்கி வேலை பார்த்து வரும் நிலையில் செல்போன் செயலி மூலம் இளம் பெண் ஒருவரிடம் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண் விஜய் தாபாவிடம் உல்லாசமாக இருக்கலாம் எனக் கூறி வீட்டிற்கு அழைத்துள்ளார். அதன்படி அந்த வாலிபர் வடபழனியில் உள்ள அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றார். அங்கு அவர் இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த நிலையில் அந்தப் பெண் பேசிய பணத்தை தருமாறு கேட்டுள்ளார்.

இதில் வாலிபருக்கு அந்த பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது அங்கு மறைந்திருந்த திருநங்கை, ஒரு இளம் பெண் உட்பட 4 பேர் திடீரென வெளியே வந்தனர். அவர்கள் பீர் பாட்டிலை காட்டி மிரட்டி அந்த வாலிபரிடமிருந்து ரூ.12,000-ஐ பறித்தனர். அதோடு இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை அவருக்கு அனுப்பி அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவோம் இன மிரட்டி தொடர்ந்து பணப்பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக அந்த வாலிபர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பரத்குமார் (24), தினேஷ்குமார் (25), திருநங்கை அஸ்விதா (26), அப்ரின் பர்கானா (21) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.