
சென்னையில் உள்ள முகப்பேர் கிழக்கு சர்ச் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு மைதிலி (60) என்பவர் கணவர் பிரிந்து சென்ற நிலையில் தன்னுடைய மகள் ரித்திகாவுடன் வசித்து வந்துள்ளார். ரித்திகா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் ஷியாம் (28) என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் அடிக்கடி வெளியே செல்லும் நிலையில் அந்த நேரத்தில் மட்டும் ரித்திகா வீட்டிற்கு தாமதமாக வந்துள்ளார். இது மைதிலிக்கு பிடிக்காததால் தன் மகளை கண்டித்ததோடு இரவு நேரத்தில் தாமதமாக வரக்கூடாது என்று கூறியுள்ளார். ஆனாலும் தன் தாயின் அறிவுரையை மகள் மதிக்கவில்லை. தொடர்ந்து தன் காதலனுடன் ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று தன் காதலனுடன் சென்ற ரித்திகா இரவு 9 மணிக்கு வீட்டிற்கு திரும்பினார். இதனால் தாய் மகளுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு கடைசியாக தகராறாக மாறியது. பின்னர் ரித்திகா தன்னுடைய காதலனுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தன் தாய் தன்னை திட்டுவதாக கூறி வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.
அதன்படி அவருடைய காதலனும் வீட்டிற்கு சென்று தன் காதலியின் தாயாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் தகராறு முற்றவே தன் காதலியின் கண்முன்னே அவருடைய தாயாரை கழுத்தை நெரித்தார். இதில் மைதிலி துடிதுடித்த நிலையில் இரக்கம் இன்றி அவரை கொலை செய்து விட்டார்.
இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதில் தப்பி ஓடிய ஷியாம் ஐஏஎஸ் தேர்வுக்காக தயாராகி வருகிறார். மேலும் இந்த கொலையில் ரித்திகாவுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவருக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால் கைது செய்யப்படுவார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.