தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று (பிப்ரவரி 11) மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் சவரனுக்கு ரூ.160 அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,16,800 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு விலை சற்று குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் விலை ஏறுமுகமாக இருப்பது நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், தூய தங்கத்தின் (24 கேரட்) விலையும் இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் தூய தங்கம் ரூ.15,928-க்கும், ஒரு சவரன் ரூ.1,27,424-க்கும் விற்பனையாகிறது.

இந்நிலையில் வெள்ளியின் விலையை பொறுத்தவரை, இன்று பெரிய மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் டாலரின் மதிப்பு போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஊசலாட்டத்தில் இருந்து வருவதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.