தமிழக அரசியலில் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். திண்டிவனத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், சினிமாவில் விசிலடிப்பது போல் அரசியலில் வெற்றி பெற முடியாது என்றும்,
மேலும் தமிழகத்தில் அதிமுகவுக்கு என்றுமே முதன்மையான எதிரி திமுகதான் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். கடந்த காலங்களில் மூப்பனார், வைகோ, விஜயகாந்த் மற்றும் கமல்ஹாசன் போன்றோர் அரசியலுக்கு வந்து பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டார்.
இந்நிலையில் அவர்கள் காலப்போக்கில் மறைந்துவிட்டதாகச் சுட்டிக்காட்டிய அவர், விஜய்யின் வருகையையும் அதே போன்ற ஒரு நிகழ்வாகவே கருதுவதாகக் குறிப்பிட்டார். அரசியலுக்கு யார் வந்தாலும் போனாலும் அதிமுகவின் செல்வாக்கை யாராலும் அசைக்க முடியாது என்று அவர் உறுதிபடக் கூறினார்.
இதனால் “நாளை நடிகர் சிம்பு கூட அரசியலுக்கு வரலாம், ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் ஒரு புதிய கட்சி முளைப்பது வழக்கம்தான்” என்று கிண்டலாகக் குறிப்பிட்ட அவர், புதிய வரவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் அதிமுகவினர் திமுகவை வீழ்த்துவதிலேயே கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
