மும்பை மாநிலத்தில் பழங்களின் மீது எலி மருந்தை தடவி விற்பனை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது கடையில் உள்ள பழங்களை எலிகள் கடிக்காமல் இருப்பதற்காக, வியாபாரி ஒருவர் அவற்றின் மீது எலி மருந்தை பூசியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.
<a href="http://
मालाडमध्ये परप्रांतीय फळ विक्रेताचा बेजबाबदारपणा शिखरावर! फळांवर Ratol सारखी क्रीम लावून थेट मुंबईकरांच्या जीवाशी खेळ. Ratol सारखे विषारी पदार्थ वापरल्याने उलटी, पोटदुखी, विषबाधा, लिव्हर नुकसान आणि जीवाला धोका निर्माण होऊ शकतो. या विक्रेत्यावर कार्यवाही झालीच पाहिजे.#MNS #mybmc pic.twitter.com/RFtulkwO4h
— शेख जब्बार (राजसाहेबांचा जब्बार) | SHAIKH JABBAR (@jabbarsmns) February 24, 2026
“>
இந்த விபரீத செயலில் ஈடுபட்ட இரண்டு பழ வியாபாரிகளை போலீசார் கைது செய்ததோடு, அவர்களின் கடைக்கும் சீல் வைத்தனர். எலி மருந்து கலந்த பழங்களை உண்பது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால், இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பழங்களை வாங்கும் போது பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
