
பாகிஸ்தான், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்திய ராணுவ தளங்களை நோக்கி தொடர்ந்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்க முயற்சி செய்துள்ளது.
ஜம்மு, பதான்கோட், கதுவா, அக்னூர், அமிர்தசரஸ் உள்ளிட்ட இடங்களில் 15-க்கும் மேற்பட்ட ராணுவ தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்கம் நடத்த முயன்றது. ஆனால் இந்தியாவின் வலுவான வான் பாதுகாப்பு அமைப்புகள் அனைத்தையும் முறியடித்தன.
இந்த தாக்குதல்களுக்குப் பதிலாக இந்தியா இன்று வணிக மையமொன்றை தாண்டி, பாகிஸ்தானின் லாகூரில் அமைந்த முக்கியமான வான் பாதுகாப்பு மையத்தை அழித்துள்ளது. இது கட்டுப்பாட்டுக்குள் இருந்த ஒரு துல்லியமான பதிலடி நடவடிக்கை என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தாக்குதலுக்குப் பிறகு, ஜம்மு மற்றும் பஞ்சாபில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அமிர்தசரஸ், கதுவா, சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்திய ராணுவம் எச்சரிக்கையுடன் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை இந்தியா பாகிஸ்தானின் 8 ஏவுகணைகளை தாக்கி அழித்தது குறிப்பிடத்தக்கதாகும்.