புதுச்சேரி அரசு துறைகளில் சுமார் 30,000 க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களில் சிலர் வேலையில் மெத்தனமாக இருப்பதாகவும் வேலை நேரத்தில் அலுவலகத்தில் இல்லாமல் இருப்பதும் உயர் அதிகாரிகளுடைய உத்தரவுகளை பின்பற்றாமல் இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அது மட்டும் இன்றி அரசு ஊழியர்கள் அனைவரும் காலையில் 8:45 மணி முதல் மாலை 5:45 மணி வரை வேலை செய்ய வேண்டும். ஆனால் ஊழியர்கள் உரிய நேரத்தில் அலுவலகத்திற்கு வரவில்லை எனவும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது .

இந்த நிலையில் இது குறித்து தலைமைச் செயலாளர் ராஜு வர்மா அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளார். அதாவது வரும் ஜனவரி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் பயோமெட்ரிக் வருகை பதிவை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்த புகாரை சரி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.