அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில், எம்ஆர்ஐ மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜுன் மாதம் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

அவரது நீதிமன்ற காவல் 10-வது முறையாக வரும் 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சாட்சிகளை கலைத்து விட வாய்ப்புள்ளதால், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்த நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.