நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்ததோடு, நீதிமன்றத் தடையால் பொங்கல் வெளியீடும் தள்ளிப்போயுள்ளது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழலில், நடிகர் சிபி சத்யராஜ் தனது எக்ஸ் தளத்தில், “இன்று ஜனநாயகனும் இல்லை, இங்கு ஜனநாயகமும் இல்லை” என்று பதிவிட்டுள்ள கருத்து இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தணிக்கைக் குழுவின் இந்த நடவடிக்கைக்கு மாரி செல்வராஜ், பா. ரஞ்சித் போன்ற இயக்குநர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், சிபி சத்யராஜின் இந்த மறைமுகமான விமர்சனம் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

மேலும் திரைப்பட வெளியீட்டில் ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கல் காரணமாக விஜய் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர். அதே நேரத்தில், சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்படம் பல தடைகளைக் கடந்து திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதனால் ‘ஜனநாயகன்’ படத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த முட்டுக்கட்டை குறித்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் மாறி மாறி குற்றம் சாட்டி வரும் நிலையில், சிபி சத்யராஜின் பதிவு தற்போதைய சூழலை விமர்சிக்கும் விதமாக அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.