உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தின் வேவ் சிட்டி பகுதியில் உள்ள ஒரு சலூனில் நடந்த அருவருப்பான சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது’லெவல்-அப்’ என்ற பெயரில் செயல்படும் சலூனில், அர்ஷத் அலி என்ற ஊழியர், ஒரு வாடிக்கையாளரின் முகத்தில் மசாஜ் செய்யும் முன், க்ரீமில் எச்சில் துப்பி தடவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலின் வீடியோ வைரலானதும், போலீசார் உடனடியாக அர்ஷத்தை கைது செய்து விசாரணை நடத்தினர்.

 

 

இந்த சம்பவம் டிரீம் ஹோம்ஸ் சொசைட்டியில் உள்ள அந்த சலூனில் நடைபெற்றதாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். இது பற்றி. ஏசிபி பிரியஸ்ரீ பால் கூறியதாவது, ஞாயிற்றுக்கிழமை அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி காவல்துறை கவனத்திற்கு வந்ததும், சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டனர். வீடியோவில், அர்ஷத் ஒரு வாடிக்கையாளரின் முகத்தில் கிரீம் தடவும்போது, க்ரீமை முகத்தில் பூசுவதற்கு முன் அதில் துப்பும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன. அவர் தஸ்னாவின் அஸ்லம் காலனியில் வசிப்பவர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

விசாரணையின் போது, அர்ஷத் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கேட்டுள்ளார். ஆனால் அவர் ஏன் இதுபோன்ற செயலில் ஈடுபட்டார் என்பதைப் பற்றி தெளிவான விளக்கம் வழங்கவில்லை. தற்போது, போலீசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் இது குறித்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.