மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானேவில் 15 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அந்த சிறுமியின் தாய்க்கும் 30 வயது நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. ஒரு நாள் அந்த நபர் தனது கள்ளக்காதலின் வீட்டிற்கு சென்றபோது 15 வயது சிறுமியின் மீது ஆசை வந்தது. இதனால் தனது கள்ளக்காதலியிடம் அனுமதி வாங்கி அவரது மகளையே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் இது பற்றி வெளியில் சொன்னால் உனது தாய் தந்தையை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் சிறுமி நடந்த சம்பவத்தை தனது தந்தையிடம் கூறி கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சொன்சட்டத்தின் கீழ் அந்த நபரையும், உடந்தையாக இருந்த சிறுமியின் தாயையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.