பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கடந்த பல மாதங்களாகத் தொடர்ந்து போராடி வந்தனர். இவர்களது கோரிக்கையை ஏற்று, முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை’ (Assured Pension Scheme) சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை வரவேற்று, போராட்டக் குழுவினர் முதல்வரை நேரில் சந்தித்துத் தங்களது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இந்தப் புதிய திட்டம் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் முன் தேதியிட்டு அமலுக்கு வருவதாகத் தமிழக அரசு சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு ஒரு நிலையான தீர்வு கிடைத்துள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
