தமிழக அரசியலில் சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி மீண்டும் அதிகாரத்தின் ஒரு அங்கமாக மாறியிருப்பது அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், “ஆட்சியில் பங்கு கிடையாது” என்று கூறி தேர்தலைச் சந்தித்த திமுகவை மக்கள் நிராகரித்துவிட்டதாகவும், “ஆட்சியில் பங்கு” என்று அறிவித்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு மக்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

59 ஆண்டுகளுக்குப் பிறகு கதர் சட்டை அணிந்த இருவர் தமிழக அமைச்சரவையில் இடம்பிடிப்பது உணர்ச்சிப்பூர்வமான தருணம் என்று பதிவிட்டுள்ள அவர், 36 சதவீத கமிஷன் அரசியலில் இருந்து தமிழகத்தை விடுவித்து, ஊழலற்ற ஆட்சியை நோக்கி நகர்த்த வேண்டியது புதிய அரசின் கடமை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

விஜய்யின் இந்த ‘கூட்டணி ஆட்சி’ வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருப்பது தமிழக அரசியலில் ஒரு புதிய வரலாற்றின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.

“>