சென்னை மாநகராட்சியில் சட்டப்படி அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரியை செலுத்தி விட வேண்டும். இவ்வாறு பதினைந்து நாட்களுக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு ஐந்து சதவீத ஊக்கத்தொகை அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். அதன்படி இந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் ஊக்கத் தொகையை பெற்றுள்ளனர்.

2023-24 நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்க தகுதி உடையவர்கள் ஆகிறார்கள். உரிமையாளர்கள் தங்களுடைய சொத்து வரியை இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளர்கள் அல்லது சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் அமைந்துள்ள அரசு இ சேவை மைய ங்களில் செலுத்தலாம். அதுமட்டுமின்றி நம்ம சென்னை மற்றும் பேடிஎம் செயலி, சென்னை மாநகராட்சி இணையதளம் மூலமும் டிஜிட்டல் பண பரிவர்தனையாக செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.