
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி இவானா. 75 வயதான இவானா கடந்த ஆண்டு ஜூலை மாதம் தனது வீட்டின் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில் அவர் தன்னுடைய இறுதி நாட்களில் தனக்குத் துணையாக நின்ற தனது செல்ல நாயுடன், உதவியாளராக இருந்த ஒரு பெண்ணுக்கு தனது சொத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார்.
இந்த உயில் செல்லப்பிராணிகள் மீது அவர் கொண்டிருந்த அதீத அன்பை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது என்று அந்த நாட்டினர் கருத்து தெரிவிக்கின்றனர். டிரம்ப் மனைவியின் உயில் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.