திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பாசன பணிகளுக்காக சொட்டு நீர் பாசன முறையினை அமைக்க தோட்டக்கலை துறை மூலம் மானியம் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் 2023-24 ஆம் நிதி ஆண்டிற்கு 1400 ஏக்கரில் தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கபட்டு 11.42 கோடி மானியம் ஒதுக்கப்பட்டது.
இதன் மூலம் சொட்டு நீர் பாசனம் அமைக்க சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.