
இத்தாலியில் இருந்து ஸ்விட்சர்லாந்து வரையில் பிரம்மாண்ட கப்பல் பயணம் மூலமாக ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கு முந்தைய நாள் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. இவர்களின் திருமண அழைப்பிதழில் வாழ்க்கை என்பது ஒரு பயணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக அளவில் பிரபலமான பலரும் இவர்களுடன் ஒரு வார கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள உள்ளனர். இன்று கப்பலில் வரவேற்பு உணவு உடன் கொண்டாட்டங்கள் தொடங்க உள்ளது.
அடுத்து மேற்கத்திய முறைப்பாட்டு உடைகளை அணிந்திருக்கும் நட்சத்திர உணவு கண் கவர் விருந்து நடைபெறும். மே 30 நாளை ரோமன் ஹாலிடே என்ற கருப்பொருள் கொண்ட ரோமில் ஒரு நாள் சுற்றுலா பயணம் நடைபெறும். மே 31 நாளை மறுநாள் ” வி இன் ஒன் அண்டர் தி சன் “என்ற கருப்பொருள் கொண்ட பிறந்தநாள் கொண்டாட்டம் கப்பலில் மகிழ்ச்சியான உடை அணிவது கடைபிடிக்கப்படும். மாலை மாஸ்க் அணிந்த கருப்பு உடை அணிவது கட்டாயம். ஜூன் 1 ” La Dolce Vita” (நல்ல வாழ்க்கை) என்ற கருப்பொருள் கொண்ட கொண்டாட்டங்கள் நிறைவு பெறும்.
ஜோடியின் தனிப்பட்ட தன்மையை உறுதி செய்ய கப்பல் முழுவதும் கண்டிப்பான போன் பயன்பாட்டு தடை கடைபிடிக்கப்படும். இந்த கொண்டாட்டம் இந்தியாவின் ஜாம் நகரில் மார்ச் மாதம் நடைபெற்ற அவர்களின் மூன்று நாள் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களை தொடர்ந்து வருகின்றது. இந்த ஜோடிக்கு ஜூலை 12ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது