சென்னையில் நடைபெற்ற செஸ் கிராண்ட் மாஸ்டர் சேலஞ்சர்ஸ் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரணவ் சிறப்பான ஆட்டத்தால் முதலிடம் பிடித்தார். மொத்தம் ஏழு சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் 4 வெற்றிகளையும் 3 டிராக்களையும் பெற்று மொத்தம் 5.5 புள்ளிகளுடன் பிரணவ் முதலிடம் பெற்றார்.

இந்த சாதனையால் தமிழ் நாடு சதுரங்கத் துறையில் பெருமை சேர்த்திருக்கிறார் பிரணவ். இவரது வெற்றியை இந்திய சதுரங்க ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.