அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் பியூனஸ் ஏர்ஸில். இங்கு ஒரு ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. இங்கு நின்ற ஒருவர் செல்போன் பார்த்தபடியே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அங்கிருந்து வேகமாக ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனை அவர் கவனிக்காமல் தண்டவாளத்தில் நடந்த சென்று கொண்டிருந்தார். ரயில் அருகே வந்ததும் சத்தத்தை உணர்ந்து அவர் நொடி பொழுதில் சுதாகரித்துக் கொண்டு தண்டவாளத்தை விட்டு விலகினார்.

இதனால் லேசான காயங்களுடன் அவர் உயிர் தப்பினார். இது குறித்தான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் ஏற்கனவே ரீல்ஸ் மோகம் போன்றவைகளால் இளைஞர்கள் பலர் ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு உயிரை இழக்கும் அளவிற்கு சென்ற நிலையில் தற்போது செல்போன் முகத்தால் ஒருவர் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற நூலிழையில் உயிர்தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Daily Mail (@dailymail)