
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளி சந்தை பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 13 வயதில் ஒரு மகனும் 5 வயதில் ஒரு மகளும் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவர் பிரிந்து சென்று விட்டார். இதனால் அந்த பெண் தன் குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வரும் நிலையில் நாகர்கோவிலில் இருக்கும் ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் தினமும் காலை நேரத்தில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பும் போது தினந்தோறும் மகள் அழுது கொண்டிருந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே 5 வயது சிறுமி அழுது கொண்டிருந்த நிலையில் அது பற்றி கேட்டபோது அவர் பதில் ஒன்னும் சொல்லவில்லை.
இதனால் அந்த பெண் பயந்து போய் அக்கம் பக்கத்தில் விசாரித்த போது தான் அவருடைய 13 வயது மகன் அந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. அந்த சிறுமி தனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாததால் அழுது கொண்டிருந்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தாய் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி 13 வயது சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக நடத்திய விசாரணையில் சிறுவன் செல்போனில் ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்கள் பார்த்து தன் தங்கையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் குழந்தைகள் பெற்றோர்களிடம் செல்போன் கொடுப்பதை தவிர்ப்பதே மிகவும் நல்லது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.