சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வரும் நிலையில் இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 உயர்ந்து ஒரு சவரன் 63 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்பிறகு ஒரு கிராம் 7930 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேப் போன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 8651 ரூபாயாகவும், ஒரு சவரன் 69208 ரூபாயாகவும் இருக்கிறது. மேலும் வெள்ளி விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் 107 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் ஆகவும் இருக்கிறது.