தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று போன்ற வெற்றி படங்களை இயக்கிய எச். வினோத் நடிகர் அஜித் உடன் இணைந்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என தொடர்ந்து 3 படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இதன் காரணமாக இயக்குனர் எச். வினோத்தின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

இந்நிலையில் இயக்குனர் வினோத் அடுத்ததாக கமல்ஹாசனை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அண்மையில் நடிகர் கமலை சந்தித்து இயக்குனர் வினோத் கதை சொல்லிவிட்டதாகவும் அந்த கதை கமலுக்கு பிடித்து விட்டதால் அவரும் நடிப்பதற்கு ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.