
பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை எங்களுடன் கூட்டணி வைப்பதற்காக தவம் இருக்கிறார்கள் என்று கூறினார். அதாவது தீண்ட தகாத கட்சி என்றும் எங்களுடன் கூட்டணி வைத்ததால் தான் தோல்வி அடைந்தோம் என்று விமர்சித்தவர்கள் தற்போது எங்களுடன் கூட்டணி வைக்க தவம் இருக்கிறார்கள் என்றார். அவர் அதிமுகவை தான் அப்படி குறிப்பிட்டு பேசியதாக கூறப்பட்ட நிலையில் இதற்கு தற்போது எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, அவர் அதிமுகவை பற்றி தான் அப்படி குறிப்பிட்டாரா.? பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்காக கட்சிகள் தவம் கிடப்பதாக அண்ணாமலை கூறியது அதிமுகவை அல்ல. கூட்டணி தொடர்பாக இன்னும் ஆறு மாதங்களுக்கு பிறகு தான் முடிவு எடுக்கப்படும். இதனை நான் ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டேன். மேலும் அதிமுக தொடங்கியது முதல் இன்று வரை எந்தகட்சியுடனும் கூட்டணி வைக்க தவம் கிடந்ததாக சரித்திரமே கிடையாது என்று கூறினார்.