இந்தியாவில் 2025-ல் ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடர் நடைபெறும் என்று தற்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. கடந்த 1990 ஆம் ஆண்டு இந்தியாவில் ஆசிய கோப்பை நடைபெற்ற நிலையில் தற்போது பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி டி20 ஃபார்மெட்டில் அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெற உள்ளது. கடந்த வருடம் பாகிஸ்தானில் ஆசிய உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்ற நிலையில் இந்தியா அங்கு சென்று விளையாட மறுத்துவிட்டது.

இதனால் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் இலங்கைக்கு மாற்றப்பட்டது. இதனால் அடுத்த வருடம்  நடைபெறும் போட்டியில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் வருமா என்பது சந்தேகம்தான். இந்நிலையில் ஆசிய  கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 5 அணிகள் நேரடியாக லீக் சுற்றில் மோதும் நிலையில் மீதமுள்ள ஒரு அணி தகுதி சுற்றின் மூலம் தேர்வு செய்யப்பட இருக்கிறது. மேலும் இதேபோன்று 2027 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் ஆசிய கோப்பை தொடர் ஒருநாள் கிரிக்கெட் ஃபார்மட்டில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.