இன்றைய காலகட்டத்தில் மெட்ரோ ரயிலின் பயன்பாடு என்பது மிகவும் அதிகரித்துவிட்டது. நாடு முழுவதும் பெரிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை இருக்கும் நிலையில் தமிழகத்திலும் சென்னை உள்ளிட்ட இடங்களில் இருக்கிறது. வேலைக்கு செல்பவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் தினசரி மெட்ரோ ரயில் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று முதல் மெட்ரோ ரயில் சேவைகளில் CMRL  பயண அட்டையை பயன்படுத்த முடியாது என மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதற்கு பதிலாக இன்று முதல் NCMC என்ற தேசிய போக்குவரத்து அட்டைக்கு முழுமையாக மாறியுள்ளது.

41 மெட்ரோ ரயில்வே நிலையங்களிலும் CMRL பயண அட்டையை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பயண அட்டையில் உள்ள மீதி தொகையை NCMC பயண அட்டைக்கு மாற்றி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.