
ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாடு முழுவதும் எண்ணப்பட்டு வருகின்றது. வாக்கு எண்ணிக்கை விவரங்கள் வெளியாகி வருகிறது. மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவில் தமிழ்நாட்டில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
சென்னையில் உள்ள் 3 தொகுதிகளான தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னையிலும் அக்கட்சியே முன்னிலை வகிக்கும் நிலையில் இம்மூன்று தொகுதிகளிலும் பாஜக இரண்டாமிடத்தில் உள்ளது. மூன்றிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மூன்றாமிடத்தில் உள்ளது அக்கட்சிகளின் தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.