சென்னையில் ரூ.280 கோடி மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறை அதிகாரிகள் தொடர்ந்து சென்னைக்கு வரும் போதைப் பொருள்களை  தடுக்கக்கூடிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் சென்னையில் இருப்பதாகவும், குறிப்பாக மியான்மரில் இருந்து மணிப்பூர் வழியாக இலங்கைக்கு கடத்திச் செல்ல இருப்பதாகவும்  போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் தொடர்ந்து போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர். இந்த நிலையில் தான் மணிப்பூரிலிருந்து  சென்னை வழியாக, சென்னையில் இருந்து இலங்கைக்கு கொண்டு செல்ல இருந்த இலங்கை நபர் உதயகுமார், பெரம்பூரை சேர்ந்த அக்பர் அலி இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில் 52 கிலோ மெத்தம் பெட்டமைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனுடைய மதிப்பு 280 கோடி என கணிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக மிகப்பெரிய மதிப்பிலான இந்த போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள்.. உதயகுமார் மற்றும் அக்பருக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திருக்கின்றனர். இலங்கைக்கு கொண்டு செல்ல சென்னையில்  தனியார் விடுதியில் தங்கி இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. போதை பொருளை  கடத்தி வந்து சென்னையில் தங்கி இருப்பதாக முதல் கட்டமாக அதிகரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பிறகு அக்பர் அலி மற்றும் உதயகுமார் ஆகியோர் சிக்கினர். அதன்பிறகு அவர்களிடம் விசாரணை செய்ததில் அவர்களிடம் இருந்து 52 கிலோ மெத்தம் பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கூடுதலான போதை பொருள் இருக்கிறதா என தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.