சென்னையிலிருந்து அயோத்திக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நேரடி விமான சேவை தொடங்கப்படும் என ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது. ராமர் கோவில் திறப்பு விழா வருகின்ற ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. அங்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து அயோத்திக்கு விமான டிக்கெட் விலை 6499 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு மற்றும் மும்பையில் இருந்தும் அயோத்திக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.