சென்னையின் முக்கிய பகுதியான உஸ்மான் சாலையில் தற்போது புதிய மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட உள்ளதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உஸ்மான் மேம்பாலத்தில் இருந்து அண்ணாமலை சிஐடி ஒன்னாவது மெயின் ரோடு வரை மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் உஸ்மான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஜனவரி 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

அண்ணாமலை சிஐடி ஒண்ணாவது மெயின் ரோடு வழியாக தியாகராய நகர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம் எனவும் தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தில் இருந்து அண்ணாச்சாலை சிஐடி 1வது மெயின் ரோடு செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு கனமா பேட்டை சந்திப்பு, முப்பராயன் தெரு,தெற்கு மேற்கு போக்கு சாலை மற்றும் இணைப்பு சாலை மூலம் அண்ணா சாலையைச் சென்றடைய வழி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.