
வொண்டர்லாவின் 5வது பொழுதுபோக்கு பூங்கா, திருப்போரூர் அடுத்த இள்ளளூரில் 62 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. சுமார் 3400 கோடி செலவில் அமைய உள்ள இந்த பூங்காவுக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கிய நிலையில் பூமி பூஜை நடைபெற்றது. கொச்சி, பெங்களூரு, ஐதராபாத்தில் ஏற்கனவே வொண்டர்லா பூங்காக்கள் இயங்கி வரும் நிலையில் ஒடிசாவில் புதிய பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னைக்கு அருகில் புதிய தீம் பார்க் அமைய உள்ளது சென்னை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.