தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் ரயில் தண்டவாளம் மற்றும் ரயில்வே பாலங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் இந்த வழித்தடத்தில் திங்கட்கிழமை இரவு முதல் ரயில் சேவை தடை செய்யப்பட்டது. தற்போது மறு சீரமைப்பு பணி நடைபெற்று வரும் நிலையில் திருச்செந்தூர் மற்றும் முத்துநகர் உள்ளிட்ட ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதாவது சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு வியாழக்கிழமை சென்ற செந்தூர் விரைவு ரயில் திருநெல்வேலியுடன் நிறுத்தப்படும். இந்த ரயில் மறு மார்க்கமாக வெள்ளிக்கிழமை திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படும். அதனைப் போலவே பாலக்காடு மற்றும் திருச்செந்தூர் விரைவு ரயில் வெள்ளிக்கிழமை திருநெல்வேலி வரை இயக்கப்பட்டு அதன் பிறகு பாலக்காடுக்கு செல்லும். சென்னை எழும்பூரில் இருந்து தூத்துக்குடிக்கு வியாழக்கிழமை செல்லும் முத்துநகர் விரைவு ரயில் மதுரையுடன் நிறுத்தப்படும் எனவும் மறுமார்க்கமாக வெள்ளிக்கிழமை மதுரையிலிருந்து புறப்பட்டு சென்னை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.