தமிழகத்தில் கூட்டுறவு சங்கம் சார்பாக வங்கிகளில் தவணை தவறை நிலுவையில் உள்ள கடன்களுக்கு சிறப்பு கடன் தீர்வு திட்டம் மூலமாக கூடுதல் வட்டி, அபராத வட்டி மற்றும் இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட உள்ள நிலையில் இதற்காக வங்கிகளின் சிறப்பு கடன் தீர்வு திட்டம் செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு கடவுளை தள்ளுபடி செய்யலாம் என அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கம் வங்கிகளில் தவளை தவறி நிலுவையில் உள்ள கடன்களுக்கு தீர்வு காணும் விதமாக சிறப்பு கடன் தீர்வு திட்டம் தொடர்பாக அமைச்சர் பெரிய கருப்பன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இந்த திட்டத்தின்படி கணக்கிடப்பட்ட நிலுவைத் தொகையில் 25 சதவீதம் தொகையை அரசாணை வெளியிட்ட நாளிலிருந்து மூன்று மாதத்திற்குள் செலுத்தி வங்கி மற்றும் சங்கத்துடன் ஒப்பந்தம் செய்யலாம். மீதமுள்ள 75 சதவீத தொகையை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நாளிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் அதிகபட்சம் ஆறு தவணைகளுக்குள் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்கியவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.