செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26 ஆம் தேதி வரை காவலை நீட்டித்தது சென்னை முதன்மைஅமர்வு நீதிமன்றம்..

சட்டவிராத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது அமலாக்கத்துறையால் செய்யப்பட்டார். அன்றைய தினமே அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார்.. இதன்படி நீதிமன்ற காவல் 28ஆம் தேதியுடன் முடிவடைந்தது.. அதனைத் தொடர்ந்து மீண்டும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டு இன்றுடன் முடிவடைந்த நிலையில், இன்றைய தினமும் அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார்.. அப்போது அவரிடம் உங்களுடைய காவல் வரும் 26 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதாக நீதிபதி அல்லி அவர்கள் தெரிவித்தார்..

இதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடைய நீதிமன்ற காவல் இந்த வழக்கில் இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அதாவது 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டு 26/7/2023 வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை மூன்றாவது நீதிபதி அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது..

இந்த நிலையில் இந்த காவல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், வழக்கினுடைய விசாரணை நடைபெற்று வரக்கூடிய சூழலில், அந்த வழக்கின் விசாரணையை கருத்தில் கொள்ளாமல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடையை நீதிமன்ற காவலை நீட்டித்துக் கொள்ளலாம் என ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது