செங்கோட்டையனின் ஆதங்கத்திற்கு எடப்பாடி பதிலளிக்காமல், அவரது வாய்ஸ் ஜெயக்குமார் தான் பதில் அளித்துள்ளார் என அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு ,மக்களின் அன்பை பெற்றவர்கள் மக்களோடு பயணிப்பவர்களுக்கு எதிராக வியூக மன்னர்களால் எவ்வளவு தூரம் பலன் இருக்கும் என்று தெரியவில்லை. நாங்கள் மக்களோடு கூட்டணி வைத்து இருக்கிறோம். அதற்குரிய எடுத்துக்காட்டு தான் ஈரோடு இடைத்தேர்தலில் நின்று அனைவரும் முன்வைப்புத் தொகை இழந்தது. இது ஒரு முன்னோட்டம் தான். 2016 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் கூறியது போல 200-ம் தாண்டி உறுதிமிக்க ஒரு ஆட்சியாக அமையும். முதலமைச்சர் இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்பார்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் ஆதங்கத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலளிக்காமல் அவருடைய வாய்ஸ் ஜெயக்குமார் தான் பதில் அளித்துள்ளார். பிற இயக்கங்களில் ஊடுருவுவது என்னுடைய பழக்கம் கிடையாது. முதலமைச்சர் குறுக்கு வழியில் ஆட்சி ஏற்பதை விரும்பாதவர் அந்தந்த இயக்கங்களின் பிரச்சினைகளை அவர்களே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். அதில் தலையிடுவதை எங்கள் தலைவர் எப்போதும் விரும்ப மாட்டார். எடப்பாடி பழனிச்சாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.

செங்கோட்டையன் விளக்கம் அளித்த போது அவினாசி – அத்திக்கடவு திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் அதற்கு அடித்தளமாக இருந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான். எனவே அவருடைய படம் அவசியம் இடம்பெற வேண்டும் என்று விழா குழுவினரிடம் கூறினேன். ஆனால் இந்த காரணத்துக்காக நான் விழாவை புறக்கணிக்கவில்லை. பாராட்டு விழா குறித்து முன்பே என்னிடம் ஆலோசனை நடத்தி இருந்தால் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பேன்” என்று கூறியுள்ளார்.