தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் சிறப்பாக நடைபெற்றது. தலைவர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை, கோட்பாடுகள், அரசியல் முன்னோடிகள் கொடி விளக்கம், மக்கள் எழுச்சி என எல்லாவற்றையும் விளக்கமாக எடுத்துரைத்தார். மாநாட்டில் விஜய் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளையும் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் சார் திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. கங்குவா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய போஸ் வெங்கட் சூர்யா அரசியலுக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்தார். போஸ் வெங்கட் திமுகவை சேர்ந்தவர்.

இந்த நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் மாநாடு முடிந்தவுடன் போஸ் வெங்கட் தனது சமூக வலைதள பக்கத்தில் எப்ப உன் கூடவுமா அரசியல் பண்ணனும்? பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு,, சினிமா நடிப்பு மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதிக் கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு? பார்ப்போம்.. என டுவீட் போட்டு இருந்தார். அந்த பதிவை தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர்.