2026 டி20 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா, கேப்டன் சூர்யகுமார் யாதவின் அதிரடியான 84 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய அமெரிக்க அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான தாக்குதலால் 132 ரன்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்ஷர் படேல் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியை உறுதி செய்தனர்.
இந்த வெற்றியின் நாயகனாக முகமது சிராஜ் உருவெடுத்தார்.
காயமடைந்த ஹர்ஷித் ரானா மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பும்ரா ஆகியோருக்குப் பதிலாக கடைசி நேரத்தில் அணியில் இணைந்த அவர், மும்பை வான்கடே மைதானத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
சூர்யகுமார் யாதவ் தன்னை தொலைபேசியில் அழைத்து அணியில் இணையச் சொன்னபோது அதை நம்ப முடியாமல் திகைத்ததாக சிராஜ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
சொந்த மண்ணில் உலகக் கோப்பை விளையாட வேண்டும் என்ற தனது கனவு விதியின் பயனால் நனவாகியுள்ளதாக அவர் மகிழ்ச்சி பகிர்ந்துள்ளார்.
